News December 31, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

காலையில் இருந்து சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Similar News
News October 26, 2025
ராசி பலன்கள் (26.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 26, 2025
சாதி எதிர்ப்பு படங்களையே எடுப்பேன்: மாரி செல்வராஜ்

சாதி எதிர்ப்பு படங்களை தொடர்ந்து எடுப்பேன் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு வெளியாகும் 250-300 தமிழ் படங்களில் பெரும்பாலானவை கொண்டாட்டங்கள் நிறைந்தவை என்றும் தன்னையும் அதே படங்கள் எடுக்கும் கூட்டத்தில் தள்ளிவிட முயற்சிக்க வேண்டாம் எனவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மேலும், தனது வாழ்க்கையை பணயமாக வைத்து படங்கள் எடுப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News October 26, 2025
Women’s CWC: மீண்டும் இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதல்

Women’s CWC, 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுவது உறுதியாகியுள்ளது. நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத ஆஸி., புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன. அதன்படி, வரும் 30-ம் தேதி நவி மும்பை மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் ஆஸி., இந்தியா அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே, குரூப் ஸ்டேஜில் இந்தியா நிர்ணயித்த 331 ரன்கள் இலக்கை ஆஸி., சேஸ் செய்திருந்தது.


