News August 11, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் (MET) கணித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதையொட்டி, வீட்டை விட்டு வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.

Similar News

News August 13, 2025

கிச்சனில் அதிக நேரம் இருந்தால் கேன்சர் அபாயம்?

image

ஆண்களின் நோயாக கருதப்பட்ட நுரையீரல் கேன்சர், பெண்களை அதிகளவில் பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் சமைக்கும் போது வரும் அதீத புகையால் பெண்கள் நுரையீரல் கேன்சருக்கு ஆளாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சமைக்கும்போது வெளியாகும் புகை உள்ளேயே சுற்றுவதால் மூச்சுத்திணறலில் தொடங்கி கேன்சர் வரை ஏற்படுமாம். இதனால் கிட்சன் காற்றோற்றமாக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News August 13, 2025

ரஜினி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லோகேஷ்!

image

கூலி படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு லோகேஷ் இன்றிரவு ஷாக் கொடுத்துள்ளார். அப்படம் LCU-வில் வருமா இல்லையா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூலி படம் LCU-வில் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அது தனிக்கதையாக இருக்கும் என விளக்கம் அளித்த அவர், படம் பார்ப்பவர்கள் ‘ஸ்பாய்லர்’ செய்யாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News August 13, 2025

BREAKING: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்

image

ICICI வங்கியை தொடர்ந்து HDFC வங்கியும் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆக.1 முதல் கணக்கு தொடங்கியவர்களுக்கு நகர்ப்புற சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் ₹10,000-லிருந்து ₹25,000-மாகவும், ஊரகப் பகுதிகளில் இந்த தொகை ₹10,000-மாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள மற்றும் BSBDA கணக்குகளுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. பழைய வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

error: Content is protected !!