News August 8, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News February 16, 2026
பிரபாஸுக்கு படப்பிடிப்பில் காயம்

‘Fauji’ படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸ் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குதிரை சவாரி செய்யும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்தானதாகவும் கூறப்படுகிறது. டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் பிரபாஸ் ஓய்வில் இருப்பதாகவும், விரைவில் அவர் படக்குழுவுடன் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது. பிரபாஸ் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ரசிகர்கள் SM-ல் கூறியுள்ளனர்.
News February 16, 2026
ராசி பலன்கள் (16.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 16, 2026
FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

கோல்ட் மார்க்கெட்டில் நிலவும் நிச்சயமற்ற சூழலை சரிகட்ட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து குறைந்த வரியில் 80 டன் மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் புதிய கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த இறக்குமதியால் இனி வரும் நாள்களில் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE


