News August 8, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை திருப்பத்தூர், தி.மலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், சேலம், மதுரை, கோவை, நீலகிரி, திருச்சி, ஈரோடு, நாகை, தஞ்சை, நாமக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News March 13, 2026
ஆவடி: ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.40 லட்சம் இழப்பு!

திருவள்ளூர்: ஆவடியைச் சேர்ந்த சுஜாதா நாதன் (50) என்பவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி, தனது வங்கி கணக்கில் ரூ.40 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால், கூறியபடி இரட்டிப்பு தொகை வராததால் தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 13, 2026
ராமதாஸ் ஐகோர்ட்டில் அவசர முறையீடு

கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணைக்கு உரிமையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், ஐகோர்ட்டை ராமதாஸ் நாடியுள்ளார். மேலும், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்ததையும், அன்புமணி தரப்பு மறைத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 13, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. விலை பாதியாக குறைந்தது

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் முதல் தள்ளுவண்டி உணவுக் கடை வரை மூடப்பட்டதால், கோயம்பேடு சந்தையில் மட்டும் தக்காளி, வெங்காயம், கீரை உள்ளிட்ட காய்கறிகள் 2,000 டன் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளன. இதனால் காய்கறிகளை பாதி விலையில் விற்பனை செய்தாலும், வாங்குவதற்கு ஆளின்றி வீணாவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


