News August 4, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

இரவு 7 மணி வரை திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, க.குறிச்சி, கடலூர், விருதுநகர், கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காஞ்சி, சென்னை, செ.பட்டு, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, சேலம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.
Similar News
News March 6, 2026
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம்.. நயன்தாரா வாழ்த்து REWIND

விஜய் – த்ரிஷா சர்ச்சை SM-ல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே, த்ரிஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்த பழைய பதிவு SM-ல் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், த்ரிஷா, வருண் ஆகியோருக்கு வாழ்த்துகள் என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு வருண் என்பவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
News March 6, 2026
வாயைச் சுற்றி கருப்பா இருக்குதா? TIPS

வாயை சுற்றி கருப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறதா? இதனை ஈசியா சரி செய்யலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி 2 நிமிடங்கள் வாயைச் சுற்றி தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையை நீக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த TIPS பலருக்கும் உதவும் என்பதால் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
ராமதாஸ் வேட்பாளர் மீது அன்புமணி தரப்பு தாக்குதலா?

எதிரும் புதிருமாக இருக்கும் அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்புகள் அடிதடி மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் <<19310925>>சாமிநாதன் <<>>என்பவர் களமிறக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அன்புமணி தரப்பு அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ரத்த காயங்களுடன் டிஜிபி அலுவலகத்தில் சாமிநாதன் புகார் அளித்துள்ளார்.


