News July 24, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பொழிய வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா என கமெண்ட்டில் சொல்லுங்க.
Similar News
News March 8, 2026
அரசியல் அடிப்படை மாறணும்: சீமான்

தமிழக அரசியலில் அடிப்படை மாற வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இந்திய கட்சிகளுக்கு மும்மொழி, திராவிட கட்சிகளுக்கு இருமொழி, எங்களுக்கு (நாதக) தமிழ் மொழிதான் கொள்கை என்று தெரிவித்துள்ளார். ஆள், மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டாம், அரசியல் அடிப்படை மாற வேண்டும் எனக் கூறிய அவர், சகித்து சகித்து அடிமையாக உள்ளோம்; புரட்சியால்தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்றார்.
News March 8, 2026
₹1000 Vs ₹2000 Vs ₹2,500 .. இது எல்லாம் ஓட்டாக மாறுமா?

மகளிரின் வாக்குகளை குறிவைத்து அனைத்து கட்சிகளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில், ஆளும் திமுகவோ, மகளிர் உரிமைத்தொகை ₹1000 உடன் கூடுதலாக ₹1000 (₹2000), அதிமுகவோ குலவிளக்கு திட்டத்தின் மூலம் ₹2000, தவெகவோ 60 வரையிலான அனைத்து மகளிருக்கும் ₹2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளன. இந்த அறிவிப்புகள் பெண் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏறுபடுத்துமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.
News March 8, 2026
‘Women is Worth & Earth’ விஜய்க்கு பார்த்திபன் பதிலடி!

சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு Women என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ‘It’s worth! Worth & Worth Because women is another Earth’ எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று, தவெக மகளிர் தின விழாவில் தனது மனைவி சங்கீதா விவகாரத்தை <<19322295>>Worth இல்லை <<>>என மறைமுகமாக பேசிய விஜய்க்கு இது பதிலடி என நெட்டிசன்கள் SM-ல் கருத்து கூறி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


