News April 24, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் மாலை 6.30 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News January 5, 2026
யாருடன் கூட்டணி? டிடிவி தினகரன் முக்கிய முடிவு!

பிரிவினைவாத அரசியல் TN-ல் எக்காலத்திலும் எடுபடாது, அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. TTV, OPS ஆகியோர் தவெக அணியில் இடம்பெறுவார்கள் என செங்கோட்டையன் பேசியிருந்தார். இதனால், NDA கூட்டணிக்கு, TTV தினகரன் மீண்டும் செல்லப்போவதில்லை என்பதை இத்தீர்மானம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News January 5, 2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நாளை தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஹைகோர்ட் மதுரை கிளை நாளை தீர்ப்பு வழங்குகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற தனிநீதிபதி G.R.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதனை எதிர்த்து TN அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைத்திருந்த நிலையில், நீதிபதிகள் ராமசந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News January 5, 2026
FLASH: அதிமுகவில் அடுத்த நீக்கம்

கடந்த சில தினங்களாக அதிமுகவில் <<18758135>>அடுத்தடுத்து பதவி பறிப்பு, நீக்கம்<<>> தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று(ஜன.5) திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். கமாண்டோ பாஸ்கர், தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


