News July 1, 2024
அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

தமிழகத்தில் காலை 10 மணி முதல் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
வில்வித்தை விளம்பர தூதரான ராம் சரண்

உலகிலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி (Archery Premier league) இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த லீக்கின் விளம்பர தூதராக ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் மேடை வரை ஏறியதால் ராம் சரண் சர்வதேச ரசிகர்களையும் கொண்டுள்ளார். தன்னை விளம்பர தூதராக நியமித்ததற்கு மகிழ்ச்சி அடைவதாக கூறி ராம் சரண் நெகிழ்ந்துள்ளார்.
News September 20, 2025
தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலை முன்வைக்கும் விஜய்

ஈழத் தமிழர்களுக்காக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறார் விஜய். 2008-ல் முள்ளிவாய்க்கால் படுகொலையை எதிர்த்து 1 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார். 2024-ல் முள்ளிவாய்க்கால நினைவு தினத்தன்று ’மாவீரம் போற்றுதும்’ என பதிவிட்டு அதிர்வலையை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது நாகை பிரசாரத்தில் ஈழத்தமிழர்களின் உயிரும் முக்கியம் என கூறி தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலை முன்வைத்துவருகிறார்.
News September 20, 2025
தமிழகத்தில் புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

செப்.25-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதற்கிடையே, இன்று 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள். உங்க ஊரில் மழை பெஞ்சா லைக் பண்ணுங்க.