News June 26, 2024
அடுத்த 3 மணி நேரங்களுக்கு மழை

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
தனிக்கட்சி தொடங்கி விஜய்யுடன் கூட்டணியா?

சமீபத்தில் வைத்திலிங்கம் தவெகவில் இணைந்து OPS-க்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த வரிசையில் தற்போது OPS உடன் அரசியல் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், ’MGR அதிமுக’ என புதிய கட்சியை தொடங்கி தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கூட்டணி தொடர்பாக OPS எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால் எரிச்சலடைந்த இவர் இம்முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News January 24, 2026
பூத் நிலை அலுவலர்களுக்கு ECI எச்சரிக்கை

SIR பணிகளில், வாக்காளர் பட்டியலின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. SIR பணிகளில் தவறு நடந்தால் பூத் நிலை அலுவலர்களை (BLO) இடைநீக்கம் செய்வதோடு துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், குற்றச்செயல் தொடர்பான வழக்குகளில் FIR பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
News January 24, 2026
பள்ளிகள் விடுமுறை.. கூடுதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

குடியரசு தின விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர். சொந்த ஊருக்கு பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,350 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. எனவே, இங்கே <


