News May 26, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் முற்பகல் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

ஜான் பாண்டியன் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகிறது

image

அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமமுக எந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடவில்லை. 2021-ல் ADMK கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், 2024-ல் BJP கூட்டணியில் தாமரை சின்னத்திலும் ஜான்பாண்டியன் போட்டியிட்டார். இதனால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய EC முடிவு எடுத்துள்ளது.

News August 19, 2025

கழுத்து வலியை விரட்ட உதவும் மர்ஜாரியாசனா!

image

✦கழுத்து வலி மட்டுமன்றி வயிறு தொப்பையும் குறையும்.
➥தரையில் முழங்காலிட்டு, கைகளை தோள்பட்டைக்கு நேராக வைக்கவும். முழங்கால்கள் இடுப்புக்கு நேராக இருக்க வேண்டும்.
➥மூச்சை உள் இழுத்து, முதுகை வளைத்து, வயிற்றை தரையை நோக்கி தாழ்த்தவும். தலையை மேலே உயர்த்தி, மேலே பார்க்கவும்.
➥பிறகு, மூச்சை வெளியேற்றி, முதுகை மேல்நோக்கி வளைத்து, வயிற்றை உள்ளிழுத்து, தலை & தோள்களை கீழே இறக்கவும்.

News August 19, 2025

DMK-வுக்கு ஓட்டு போட்ட ADMK கவுன்சிலர்கள்.. தலைமை ஷாக்!

image

அதிமுகவில் இருந்து சிலர் திமுகவுக்கு படையெடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சங்கரன்கோவில் நகராட்சி சேர்மேனுக்கான மறைமுக தேர்தலில் <<17448219>>அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர்<<>> திமுகவுக்கு ஓட்டு போட்டது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடுப்பில் உள்ள அதிமுக தலைமை, அந்த 6 கருப்பு ஆடுகளை கண்டறிய உத்தரவிட்டுள்ளதாம். தென் மாவட்டங்களில் அதிமுக வாக்கு வங்கியை உடைக்க திமுக முயன்று வருவது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!