News May 14, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
❤️ 64 அபார்ட்மெண்ட்களை கொடுத்து உதவிய தொழிலதிபர்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார். ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்களை ஒதுக்கியுள்ளார். அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கியுள்ளார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
News March 10, 2026
OPS தனது முடிவை மாற்றினார்.. மீண்டும் ஜெயலலிதா போட்டோ!

OPS, திமுகவில் இணைந்தவுடன் வீட்டிலிருந்து அகற்றிய ஜெயலலிதாவின் போட்டோவை மீண்டும் வைத்துள்ளார். OPS, திமுகவில் இணைந்ததால் அப்செட்டில் உள்ள இளைய மகன் ஜெயபிரதீப், OPS-யிடம் பேசாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், உடனடியாக ஜெயலலிதாவின் போட்டோவை அகற்றியது இணையத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதனால், OPS தனது முடிவை மாற்றி ஸ்டாலின் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களை வைத்துள்ளார்.
News March 10, 2026
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பீரன் சிங் எங்டி (81) உடல்நலக்குறைவால் காலமானார். 1970 முதல் அசாமின் திப்பு லோக்சபா தொகுதியில் இருந்து 5 முறை MP-ஆக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


