News December 5, 2024
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு வானிலை பிரேக் விட்டாலும், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
Similar News
News December 29, 2025
NLC-ல் 575 பணியிடங்கள்.. தேர்வு இல்லாமல் சூப்பர் வாய்ப்பு!

NLC-ல் 575 அப்ரண்டீஸ் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: B.E., Diplomo. தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹12,524 – ₹15,028. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News December 29, 2025
திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா? வந்தது விளக்கம்

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்., குழு அமைத்த பிறகு, கூட்டணி பற்றி சந்தேகமே வேண்டாம் என முத்தரசன் கூறியுள்ளார். கடந்த 4 தேர்தல்களாக திமுக கூட்டணி கொள்கை பிடிப்புடன் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர், 2026-ல் கூட்டணி நீடித்து பெருவெற்றியை பெறும் என பேசியுள்ளார். அத்துடன், எதிர்த் தரப்பில், EPS-ஆல் கூட்டணியும் அமைக்க முடியவில்லை, கட்சியையும் ஒருங்கிணைக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News December 29, 2025
விஜய் கதையில் பிரதீப் ரங்கநாதன்?

கடைசியாக ’லவ் டுடே’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அப்போதே விஜய்யை சந்தித்து Science Fiction கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தக் கதை கொஞ்சம் மாற்றி எழுதி, தற்போது பிரதீப் ரங்கநாதனே அதில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. LIK படத்தின் ரிலீசுக்கு பிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.


