News December 4, 2024
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூருக்கு மழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 548 ▶குறள்: எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
▶பொருள்: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
News December 13, 2025
‘படையப்பா’ படத்தின் Bare-Body சீன் பற்றிய சுவாரஸ்யம்

‘படையப்பா’ படத்தில் வரும் Bare-Body சீன் குறித்து சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். வெற்று உடம்போடு நடிக்க போவதாக ரஜினி சார் சொன்னார். அது கேவலமாக இருக்கும் என்று சொன்னேன். அதை கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றவர், அந்த சீனில் நடித்தார். அதை பார்த்து பிரமிப்பு அடைந்தபோது, சின்ன வயசுல மூட்டை தூக்கி வளந்த உடம்பு இது என ரஜினி கூறியதாக கனல் கண்ணன் நினைவுகூர்ந்துள்ளார்.
News December 13, 2025
அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்

மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனே அமல்படுத்த கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் 2026 ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் ஊழலை கண்டித்து கடந்த 2011-ல் டெல்லியில் இவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டதால், மத்தியில் காங்., ஆட்சி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


