News June 8, 2024
விடிய விடிய மழை

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்த நிலையில், தற்போது குமரி மாவட்டத்தின் கோதையார், குற்றியார், மோதிரமலை, பேச்சிப்பாறை, ஆறுகாணி, பத்துகாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) குமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 9, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 9, 2025
கூட்டணி… ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த பாஜக

பாஜக தேசிய தலைமை புறக்கணித்ததால் NDA கூட்டணியிலிருந்து OPS விலகினார். இதனை தொடர்ந்து நெல்லைக்கு சென்ற EPS-யிடம் OPS இணைப்பு குறித்து நயினார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், நாளை தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஸை சந்திக்க வருமாறு OPS-க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
News August 9, 2025
அந்த ஹீரோ டார்ச்சர் செய்தார்.. தமன்னா பகீர் புகார்

ஷூட்டிங்கில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தமன்னா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரம்ப காலத்தில் நடித்த படத்தின் ஹீரோ, தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யாதீர்கள் என கெஞ்சியும் அந்த ஹீரோ கேட்கவில்லை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பதாக கூறிய பிறகே அவர் விலகியதாகவும் கூறியுள்ளார். எந்த ஹீரோவாக இருக்கும்?