News December 18, 2024

RAIN ALERT: இரவு 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழை

image

இரவு 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 1 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.

Similar News

News March 6, 2026

கருப்பு கவுனி அரிசி நன்மைகள்

image

அதிக நார்ச்சத்து, குறைவான கலோரிகள் & கார்போஹைட்ரேட் கொண்ட கருப்பு கவுனி அரசியை, சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதிக நார்ச்சத்து காரணமாக குடல் இயக்கத்திற்கும், வயிற்றுப்புண்களை குணமாக்குவதற்கும் உதவுகிறது. கல்லீரல் நச்சுகளை நீக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற, BP பிரச்னையை தீர்க்க கருப்பு கவுனி அரிசியில் பொங்கல், லட்டு போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.

News March 6, 2026

மார்ச் 6: வரலாற்றில் இன்று

image

*1790 – ஆங்கிலேயர்களால் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது *1967 – தமிழகத்தில் திமுக முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது *1972 – இயக்குநர் கரு.பழனியப்பன் பிறந்தநாள் *2009 – அரசியல்வாதி சோ.அழகர்சாமி நினைவு நாள் *2016 – நடிகர் கலாபவன் மணி நினைவு நாள் *2019 – நடிகர் டைப்பிஸ்ட் கோபு நினைவு நாள்

News March 6, 2026

இந்த வார ஓடிடி விருந்து

image

இந்த வாரம் அரை டஜனுக்கும் அதிகமான தமிழ் படங்கள் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன *’வித் லவ்’ – மார்ச் 6, நெட்பிளிக்ஸ் *விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ – மார்ச் 6, ஜீ5 *’க்ராணி’ – மார்ச் 6, சன் நெக்ஸ்ட் *’ஜாக்கி’ – மார்ச் 6, அமேசான் பிரைம் *’டியர் ரதி’ – மார்ச், சன் நெக்ஸ்ட் *விமலின் ‘தேசிங்கு ராஜா 2’ – மார்ச் 6, டென்ட் கொட்டா *கார்த்தியின்’வா வாத்தியார்'(தெலுங்கு) – மார்ச் 6, அமேசான் பிரைம்

error: Content is protected !!