News August 7, 2024
மழையால் ஆட்டம் பாதிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி இன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற தெ.ஆ பேட்டிங் செய்துவருகிறது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 9 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டப்ஸ் 2, டோனி டி ஷோரி 32 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது
Similar News
News December 24, 2025
தவெகவுக்கு முதலிடம் கொடுத்தாரா OPS?

தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்திய OPS, 2026 தேர்தல் தொடர்பாக சில கேள்விகள் அடங்கிய படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கி கருத்து கேட்டுள்ளார். அதில், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கேள்விக்கு, முதல் ஆப்ஷனாக தவெக, 2-வதாக திமுக என இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் பிரதான எதிர்க்கட்சியான திமுக பக்கம் போகாமல், விஜய்யுடனே கூட்டணி அமைப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News December 24, 2025
பாகிஸ்தானிடம் இந்தியா உதவி கேட்கிறது: ஜாவேத்

பாக்.,கில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க சிறந்த திட்டங்களை உருவாக்கி வருவதாக Ex வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார். வெளிநாட்டு வீரர்கள் கூட பாக்., வந்து பயிற்சி எடுத்து செல்வதாக தெரிவித்த அவர், வேகப்பந்து வீச்சில் தங்களுக்கு உதவுமாறு இந்தியாவில் இருந்து கூட அதிக அழைப்புகள் வருகிறது என்றும் கூறினார். இந்தியா – பாக்., இடையே மைதானத்தில் மோதல் உள்ள நிலையில், இந்த கருத்து பேசுபொருளாகியுள்ளது.
News December 24, 2025
டிசம்பர் 24: வரலாற்றில் இன்று

*1524 – வாஸ்கோடகாமா நினைவுநாள்.
*1973 – பெரியார் நினைவுநாள்.
*1978 – ரோபோ சங்கர் பிறந்தநாள்.
*1987 – எம்.ஜி.ஆர் நினைவுநாள்.
*1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காத்மாண்டு – டெல்லி இடையே கடத்தப்பட்டு ஆப்கனின் கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது.


