News August 17, 2024
ரயில்வே வேலை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் அறிவித்துள்ள 1,376 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டயட்டிசியன், நர்சிங் சூப்பிரண்ட், ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட 20 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு RRB இணையதளங்களில் செப். 16 வரை விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு ₹500, பட்டியல் பிரிவினருக்கு ₹250 தேர்வு கட்டணம்
Similar News
News November 18, 2025
இந்த நாடுகளுக்கு டாலர் எல்லாம் ஜூஜூபி

உலகில் அமெரிக்க டாலரை விட உயர்ந்த மதிப்பில் சில நாணயங்கள் இருக்கின்றன. அவை, பெரும்பாலும் குறைந்த பணவீக்கம், மற்றும் வலுவான நிதிக் கொள்கைகள் ஆகியவற்றின் காரணமாக உயர்ந்த மதிப்பைத் தக்க வைத்துள்ளன. அந்த நாயணங்கள் என்னென்ன, எந்த நாட்டைச் சேர்ந்தவை, எவ்வளவு மதிப்பு கொண்டவை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 18, 2025
மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு இல்லை: CMRL

<<18322312>>கோவை, மதுரை மெட்ரோ<<>> ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL ) தெரிவித்துள்ளது. மேலும், மெட்ரோ ரயில் திட்டம் குறித்து TN அரசிடம் கூடுதல் ஆவணங்களுடன் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இதனால், தமிழக அரசு மீண்டும் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
தூங்கும்போது ஆளை அமுக்கும் பேய்..உண்மையா?

தூங்கும்போது யாரோ அழுத்துற மாதிரி இருக்கா? இதை பெரும்பாலானோர் பேய் அழுத்துவதாக நம்புகின்றனர். ஆனால், இது Sleep paralysis எனும் நரம்பியல் பிரச்னை என டாக்டர்கள் சொல்கின்றனர். உங்கள் மூளை தூங்குவதற்கு முன் உங்கள் உடல் தூங்கிவிடுவதால் தான் இது நடக்கிறது. இதிலிருந்து உங்களை பயமுறுத்தி எழுப்பவே பேய் போன்ற மாய தோற்றத்தை உங்கள் மூளை உருவாக்குகிறதாம். இப்படி அடிக்கடி நடந்தால் டாக்டரை அணுகுங்கள். SHARE.


