News October 21, 2025
ரயில்வேயில் வேலை: 5,810 பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிகல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்றுமுதல், வரும் நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள்ளும், தேர்ந்தெடுக்கும் பணியிடங்களுக்கு ஏற்ப பட்டம் பெற்றிருக்கவும் வேண்டும். <
Similar News
News March 31, 2026
நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது

இன்று நள்ளிரவு (ஏப்.1) முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. கப்பலூர், நாங்குநேரி, வானகரம், தேனி, பரனூர் உள்ளிட்ட தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 68 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுமார் 3% – 5% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுவதால், வாகனங்களுக்கேற்ப ₹5 – ₹100 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 31, 2026
விஜய் Vs உதயநிதி… பாதுகாப்பில் பாரபட்சமா?

விஜய்யின் கொளத்தூர் பிரசாரத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பு EC-யிடம் புகார் அளித்துள்ளது. அதற்கு பதிலடியாக திருவண்ணாமலையில் பெரும் கூட்டத்திற்கு நடுவே DCM உதயநிதி பிரசாரம் செய்ததை திமுகவினர் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இருவரின் பிரசார வாகனங்களின் முன் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, இதுதான் சமமான பாதுகாப்பா என தவெகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
News March 31, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை (ஏப்.1) தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.


