News April 9, 2024

ரயில்வேயில் வேலை: 1,113 காலிப் பணியிடங்கள்

image

தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஃபிட்டர், வெல்டர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக், கணினி ஆபரேட்டர், சுகாதார ஆய்வாளர் மெஷினிஸ்ட் உள்ளிட்ட 1,113 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும் மே மாதம் 1ஆம் தேதிக்குள் <>secr.indianrailways.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 28, 2026

போட்டி தொடங்கும் முன்பே.. RCB-க்கு SHOCK

image

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று IPL 2026 சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் RCB உடன் SRH அணி மோதுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக RCB வீரர் ஜோஸ் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்றொரு வீரரான நுவான் துஷாராவும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் யாஷ் தயாள் இந்த சீசனிலிருந்து வெளியேறினார்.

News March 28, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.வி.பாலமுருகன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் ஆத்தூரில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுவார் என EPS அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த டி.வி.பாலமுருகன், அதிமுகவில் இருந்து விலகி, ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.TNElection2026

News March 28, 2026

சொந்த வீடு கட்டணுமா? பணம் தரும் அரசு திட்டம்!

image

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ₹2.67 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. இந்த மானியம் 3 தவணைகளாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற https://pmaymis.gov.in -ல் விண்ணப்பியுங்கள். பலரது கனவை நிறைவேற்றும் இத்திட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள, SHARE THIS.

error: Content is protected !!