News July 24, 2024
“வீரவநல்லூரில் கைதான ரவுடிக்கு சம்பந்தமில்லை”

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் கைது செய்யப்பட்ட ரவுடி வீரமணிக்கும் சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை ரவுடி பட்டியலில் இருக்கும் வீரமணி சொந்த ஊரில் வைத்து வேறொரு வழக்கு சம்பந்தமாக கைது என கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
நெல்லை பஸ் நிலைய கடைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

புது பஸ் நிலைய கடையில் இன்று தீ பிடித்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா உத்தரவு படி புது பஸ் நிலையத்தில் அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கடை நடத்தும் உரிமையாளர்களின் கடை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன் உரிய உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.
News September 13, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 13, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக் குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.