News January 22, 2025
‘புஷ்பா 2’ இயக்குநர் வீட்டில் ரெய்டு!

‘புஷ்பா 2’ திரைப்பட இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சுகுமாரை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. முன்னதாக, தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 8, 2026
முதுநிலை பார்வையாளர்கள் நியமனம்: காங்.,

தமிழகத்தில் தேர்தல் பணிகளை காங்., கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. 2026 தேர்தலையொட்டி, தமிழகம்- புதுச்சேரிக்கு காங்கிரஸ் முதுநிலை பார்வையாளர்களாக முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி, குவாசி முகமது நிஜாமுதீன் ஆகியோரை நியமித்து கே.சிவேணுகோபல் அறிவித்துள்ளார். அதேபோல், அஸாமுக்கு 3 பேர், கேரளாவுக்கு 4 பேர், மேற்கு வங்கத்துக்கு 3 பேர் முதுநிலை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
News January 8, 2026
ஜனநாயகன் ரீலீஸ் இல்லை.. அபிஷியல் அறிவிப்பு

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை ஜன.9-ம் தேதி ரிலீஸ் செய்யமுடியவில்லை என்றும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ரசிகர்களின் ஆதரவே படக்குழுவுக்கு மிகப்பெரிய பலம் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது
News January 8, 2026
ராசி பலன்கள் (08.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


