News October 17, 2025
மாடர்ன் பூவாக மலர்ந்த ரகுல்

பான் இந்தியா நடிகையான பின்பு இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். ஆனாலும், அனைத்து மொழி ரசிகர்களையும் அவர் மறந்துவிடவில்லை. இன்ஸ்டாவில் தனது சமீபத்திய போட்டோஷூட்டை பகிர்ந்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். ட்ரெண்டி உடையில் கண்களை காட்டி மயக்கும் அப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். Swipe செய்து நீங்களும் பாருங்க.
Similar News
News October 18, 2025
அமைச்சரான மனைவி.. ஜடேஜா பெருமிதம்

குஜராத்தில் 16 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்து, புதிய அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கிறது. இதில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தனது மனைவி ரிவாபாவிற்கு ஜடேஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். ரிவாபாவை நினைத்து பெருமைபடுவதாகவும், அனைத்து மக்களுக்கும் இது உந்துசக்தியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு அமைச்சராக பல சாதனைகளை மேற்கொள்ளவும் வாழ்த்தியுள்ளார்.
News October 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 18, ஐப்பசி 1 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சூன்ய ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சிறப்பு: மாதப்பிறப்பு, விஷு புண்ணிய காலம், மகா பிரதோஷம். ▶வழிபாடு: சிவன் கோயில்களில் விஷு தீர்த்தம், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.
News October 18, 2025
இந்தியா அமைதியாக இருக்காது: PM மோடி

கொரோனாவிற்கு பிறகு உலகம் முழுவதும் போர்கள், பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8%ஆக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும், ஆபரேஷன் சிந்தூர், சர்ஜிகல் ஸ்டிரைக் என பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.