News June 24, 2024
ராகுலின் ராஜினாமா ஏற்பு

மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். சட்டப்படி 2 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே அவர் எம்பியாக பதவி வகிக்க முடியும். அதனால் வயநாடு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமா கடிதத்தை மக்களவையில் ராகுல் காந்தி அளித்திருந்தார். அதை தற்காலிக சபாநாயகராக பதவியேற்ற பத்ருஹரி மகதாப் ஏற்றுக் கொண்டார்.
Similar News
News September 14, 2025
இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்: ப.சிதம்பரம்

இந்தியாவிலும் புரட்சி வெடிக்காமல் இருப்பதற்கு, நாம் இன்னும் ஜனநாயக நாடாக இருப்பதே காரணம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், பசி, வேலையின்மை, வறுமை அதிகரித்துவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், இது எப்போது வெடிக்கும், எங்கு வெடிக்கும், அப்போது யார் தலைமை தாங்குவார்கள் என்று தன்னால் கூற முடியாது என்றார்.
News September 14, 2025
மகளிர் உரிமைத் தொகை: CM ஸ்டாலின் கொடுத்த அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை குறித்து அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தலைமை செயலகத்தில் CM ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்க போகிறது.
News September 14, 2025
உடல் வலி நீங்க காலையில் இந்த யோகா பண்ணுங்க!

அர்த்த பெகாசனம் செய்வதால், உடல் வலி நீங்கி, தசைகள் வலுபெறும்.
➮தரையில் குப்புற படுத்து, கைகளை தரையில் ஊன்றவும்.
➮கைகளில் அழுத்தம் கொடுத்து, மார்பை- தலையை உயர்த்தவும்.
➮வலது முழங்காலை மடித்து, இடுப்பிற்கு அருகில் கொண்டு வரவும்.
➮வலது கையை கொண்டு, வலது முழங்காலை பிடித்து, மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விடவும். ➮இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, காலை மாற்றி செய்யவும். SHARE IT.