News August 12, 2024
ராகுல் எதிர்கட்சியிலே இருப்பார்: கங்கனா

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எப்போதும் எதிர்கட்சித் தலைவராகவே இருப்பர் என பாஜக எம்பி கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். ராகுல் பிரதமராகவில்லை என்றால், நாட்டை அழிப்பதே அவரது செயல்திட்டமாக இருக்கும் என்ற அவர், ஹிண்டன்பர்க் அறிக்கையின் அடிப்படையில் அவர் தவறான கருத்துக்களை கூறி வருவதாக தெரிவித்தார். மேலும், நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க ராகுல் முயல்வதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 6, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் ₹5,000 மாறியது

<<19581206>>தங்கத்தை<<>> போன்று வெள்ளி விலையும் மாலையில் அதிகரித்துள்ளது. கடந்த 5 நாள்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்த வெள்ளி, இன்று கிலோவுக்கு ₹5,000 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் வெள்ளி 1 கிராம் ₹260-க்கும் 1 கிலோ ₹2.60 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை தற்போது ஏற்றத்துடன் காணப்படுவதால் நாளையும் வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. SHARE IT
News April 6, 2026
துரைமுருகன், சௌமியா சொத்து மதிப்பு இவ்வளவா?

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் சொத்து மதிப்பு ₹11.5 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி பெயரில் ₹59 கோடி சொத்து உள்ளதாம். அதேபோல், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு ₹65.94 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ₹4.26 கோடி மதிப்பிலான 2,927 கிராம் தங்கமும் அவரிடம் இருக்கிறதாம்.
News April 6, 2026
விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய 2 விஜய்கள்

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் என்ற பெயரில் மேலும் 2 வேட்பாளர்கள் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஜோசப் என்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், தவெகவின் விசில் சின்னம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் பெயர் குழப்பம் எதுவும் ஏற்படாது என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


