News June 16, 2024

எலான் மஸ்கிற்கு ராகுல் ஆதரவு

image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என எலான் மஸ்க் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி, இந்தியாவில் EVM என்பது ஒரு கருப்புப் பெட்டி எனவும், அதை ஆராய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கவலை அளிப்பதாகவும், அரசின் பொறுப்பின்மையினால் ஜனநாயகம் மோசடிக்குள்ளாவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 2, 2026

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியும் தேர்தலை புறக்கணிக்கும்

image

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிப்பதாக வெளிப்படையாக கூறினால், காங்கிரஸ் கட்சியின் தேர்தலை புறக்கணிக்கும் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

News March 2, 2026

சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

image

திருச்சியில் அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்குச் சான்றாகும் என சாடியுள்ள தவெக, குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும் மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

News March 2, 2026

தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்?

image

பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள். வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!