News April 25, 2025
காயம் அடைந்தவர்களுக்கு ராகுல் நேரில் ஆறுதல்

ஸ்ரீநகர் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிய இங்கு வந்துள்ளதாகவும், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் என்றும் ராகுல் தெரிவித்தார்.
Similar News
News September 13, 2025
பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று (13.09.2025) 10 தாலுக்காவிலும் மேற்கண்ட படத்தில் உள்ள இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் புதிய குடும்பஅட்டை கோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என ஈரோடு ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 13, 2025
மீண்டும் வருமா அந்த மகிழ்ச்சி!

மனிதரின் கிரியேட்டிவிட்டியால் தோன்றுவது தான் டெக்னாலஜி. ஆனால், அது இன்று நம் வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், நாம் இழந்துவிட்ட திறன்களும் ஏராளம். குறிப்பாக, டெக்னாலஜி அவ்வளவாக ஊடுருவாத நம் குழந்தைப் பருவம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது நினைவிருக்கிறதா.. எப்போதாவது அந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறீர்களா?