News April 21, 2024
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி

இந்தியா தவறான பாதையில் செல்லாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மீதான பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள அவர், முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏமாற்றம் கிடைத்த பிறகு பொய்கள் பலன் தராததால், தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் வேலையில், பாஜக ஈடுபட்டுள்ளாதாக தெரிவித்தார். வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்றவற்றை மனதில் வைத்தே மக்கள் வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 10, 2026
நகைக்கடைகளில் ஹிஜாப், புர்கா அணிய தடை

பிஹாரில் நகைக்கடைகளில் மாஸ்க் அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுப்பதற்கு புர்கா, ஹிஜாப், ஸ்கார்ப், மாஸ்க், ஹெல்மெட் அணிந்தபடி நகைக்கடைக்குள் ஆடவர், மகளிர் நுழைய அனுமதி இல்லை என அங்குள்ள நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஹிஜாப், புர்காவுக்கு தடைவிதித்தது இந்தியாவின் மத சுதந்திரத்துக்கு எதிரானது என சாடியுள்ளன.
News January 10, 2026
பொங்கல் பரிசு பணம் தாமதம்.. மக்கள் ஏமாற்றம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு பல இடங்களில் தாமதம் ஆவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஸ்மார்ட் அட்டையை வைத்து கைரேகைப் பதிவு செய்யும் (POS) கருவி மெதுவாக செயல்படுவதால் பொருள்களை வழங்க ஒரு நபருக்கு குறைந்தது 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. இதனால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயனாளிகள், கையொப்பம் பெற்று பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 10, 2026
பிணையம் இல்லாமல் லோன் கிடைக்கும்.. அசத்தல் திட்டம்!

எந்த பிணையமும் இல்லாமல் பெண்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்திருக்க வேண்டும். கடனை திரும்பிச் செலுத்த 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. உங்களது வங்கியின் இணையதளத்தின் வாயிலாக இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். புதிய தொழில் தொடங்கும் ஐடியாவில் இருக்கும் பெண்களுக்கு SHARE THIS


