News January 20, 2025
வெள்ளை டி-சர்ட் இயக்கம் தொடங்கிய ராகுல்

தொழிலாளர்களுக்கு நீதி, சமத்துவம் வலியுறுத்தி வெள்ளை டி-சர்ட் அணியும் இயக்கத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். ஏழைகள், உழைக்கும் வர்க்கத்தினரை மோடி அரசு கண்டுகொள்வது இல்லை எனவும், பெருமுதலாளிகளை மேலும் வளப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நீதி, உரிமைகளுக்கு குரல் எழுப்ப வெள்ளை டி-சர்ட் இயக்கம் தொடங்கப்படுவதாகக் கூறி, தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News March 12, 2026
ராசி பலன்கள் (12.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
முடிவுக்கு வரும் போர்? டிரம்ப் சிக்னல்

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளை USA, இஸ்ரேல் இணைந்து பெருமளவில் அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி அங்கு தாக்குதல் நடத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தான் விரும்பும் நேரத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நினைத்ததை விட அதிக சேதாரத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
News March 12, 2026
சட்டமன்ற தேர்தல்களில் மதிமுக கடந்து வந்த பாதை!

1994-ல் திமுகவுக்கு மாற்று என தொடங்கப்பட்ட மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் 4 சீட்களுக்கு அடைபட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மதிமுக போட்டியிட்ட இடங்களின் விவரம்: *1996 – 177(தனி அணி) *2001 – 211(தனி அணி) *2006 – 35(அதிமுக கூட்டணி) *2011- புறக்கணிப்பு *2016 – 28(மக்கள் நலக்கூட்டணி) *2021 – 6(திமுக கூட்டணி) *<<19357260>>2026 -4(திமுக கூட்டணி)<<>>. மதிமுகவின் எதிர்காலம் பற்றி உங்க கருத்து?


