News April 24, 2024
நாட்டுக்கான தலைவர் ராகுல் காந்தி

நாடு முழுமைக்குமான தலைவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கேரளத்தின் வயநாட்டில் பிரசாரம் செய்த அவர், வரலாற்றின் முக்கியமான தருணத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். நமது நாட்டின் ஆன்மா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தேர்தல் பத்திரம் மூலம் ரூ.13,000 கோடியை நன்கொடையாகப் பெற்ற பாஜக, காங்கிரசின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News January 3, 2026
நாமக்கல்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

நாமக்கல் மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 173 பணிகள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு சம்பளமாக மாதம் ₹19.900 முதல் ₹78,800 வரை வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18-50. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16 ஆகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News January 3, 2026
₹4,000 குறைந்தது.. மிகப்பெரிய மாற்றம்!

வெள்ளி விலையில் இன்று மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹4 குறைந்து ₹256-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 குறைந்து ₹2,56,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி விலை ₹4,000 உயர்ந்த நிலையில், இன்று அது அப்படியே தலைகீழாக குறைந்திருப்பது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
News January 3, 2026
இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம்: அன்பில்

<<18740078>>இடைநிலை ஆசிரியர்கள்<<>> தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே போராடி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றும், அவர்களை கைவிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அரசு ஒரு கட்டத்தில் நிற்பதாக கூறிய அவர், போராட்டம் நடத்துபவர்கள் மற்றொரு கட்டத்தில் இருப்பதாகவும், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.


