News April 25, 2025
காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி, தளபதி!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்று, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்கிறார். அதேபோல், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி காஷ்மீர் சென்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
Similar News
News January 9, 2026
BREAKING: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

பிப்.1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28-ம் தேதி தொடங்கி ஏப்.2-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தாண்டில் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
News January 9, 2026
BREAKING: சென்சார் போர்டுக்கு ஸ்டாலின் கண்டனம்

CM ஸ்டாலின் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்சார் வழங்கப்படாததால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. அதேபோல், ‘பராசக்தி’ படத்தில் தீ பரவட்டும், ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட முக்கிய வசனங்களுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க: சசிகுமார்

ஆஸ்கர் விருதுக்கான பொது நுழைவு பட்டியலுக்கு தகுதியான 201 படங்களில் <<18807301>>’டூரிஸ்ட் பேமிலி’<<>> இடம்பெற்றுள்ளது. இதுபற்றி பேட்டியளித்த சசிகுமார், படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 18 வயது பையனுக்கு அப்பாவாக நடிப்பதா என நினைத்திருந்தால், இப்படியொரு படம் கிடைத்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். படத்தை வெற்றிபெற வைத்த மக்களுக்கும், கொண்டாடிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


