News April 25, 2024

புரட்சி செய்வதாக கனவு காணும் ராகுல்

image

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை ஜே.டி.எஸ் தலைவர் தேவகவுடா கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், சொத்து கணக்கெடுப்பு நடத்தி பகிர்ந்து கொடுக்க ராகுல் விரும்புகிறார். தன்னை மாவோயிஸ்ட் தலைவர் என்று ராகுல் நினைக்கிறாரா? புரட்சி செய்வதாக அவர் கனவு காண்கிறார். நாட்டை தலைகீழாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது. இதனை தேர்தல் அறிக்கை குழு தலைவர் சிதம்பரம் ஏற்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News January 22, 2026

இனி வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு… நோ டென்ஷன்!

image

பத்திரப் பதிவுத்துறையின் 18 சேவைகளை உள்ளடக்கிய ஸ்டார் 3.0 செயல் திட்டத்தினை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் வீட்டிலிருந்தபடியே காகிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், திருமணப் பதிவு உள்பட முக்கிய சேவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் எந்த முறைகேடும் இன்றி தொழில்நுட்ப உதவியுடனும், வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு நடைபெற வேண்டி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

BREAKING: நடிகர் முரளி கிருஷ்ணா காலமானார்

image

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) காலமானார். ஜானகியின் ஒரே மகனான இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். அத்துடன், ’விநாயகுடு’, ‘மெல்லபுவு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், ‘கூலிங் கிளாஸ்’ என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் மற்றும் எஸ்.ஜானகியின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 22, 2026

BREAKING: 7 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சோகம்!

image

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பல தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!