News August 30, 2025
RR அணியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட்!

RR அணியின் தலைமை பயிற்சியாளர் பணியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளதாக RR அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 2024-ல் RR அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகுகிறார் என கூறப்படும் நிலையில், ராகுல் டிராவிட்டின் இந்த திடீர் விலகல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Similar News
News August 31, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 31, 2025
அனல் பறக்கும் புரோ கபடி லீக்

12-வது புரோ கபடி லீக் நேற்று முந்தினம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய, தெலுங்கு டைட்டன்ஸ் – உ.பி. யோத்தாஸ் ஆட்டம் கடைசி வரை பரபரப்பாக சென்றது. இறுதியில் 40- 35 என்ற கணக்கில் உ.பி. யோத்தாஸ் வெற்றி பெற்றது. அதேபோல், கடைசி நொடிவரை த்ரில்லிங்காக சென்ற யு மும்பா – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையேயான மற்றொரு ஆட்டம், 29-29 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
News August 31, 2025
டிரம்பின் இந்திய பயணம் ரத்து?

PM மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். வரும் நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள QUAD மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக இரு நாடுகளும் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. QUAD அமைப்பில் ஆஸி., ஜப்பான், அமெரிக்கா, இந்தியா அங்கம் வகிக்கின்றன.