News September 26, 2025

பாஜகவிற்கு புது பெயர் வைத்து விமர்சித்த ராகுல்

image

பாஜகவின் இன்னொரு பெயர் ‘பேப்பர் திருட்டு’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் போட்டி தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து, இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும், ஆனால் இதில் எல்லாம் அக்கறை காட்டாத பாஜக, அதிகாரத்தில் நீடிக்கவே அக்கறை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், வேலையின்மை என்பது வாக்கு திருட்டுடன் நேரடியாக சம்பந்தபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 26, 2025

மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

image

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மெக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது என கூறப்படுகிறது. SHARE IT.

News September 26, 2025

அமெரிக்கா இதை அனுமதிக்க வேண்டும்: இந்தியா

image

ஈரான், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு USA-விடம் இந்தியா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு சமீபத்தில் USA சென்றது. அப்போது ரஷ்யா, ஈரான், வெனிசுலாவில் இருந்து ஒரே நேரத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடைவிதித்தால், அது சர்வதேச அளவில் விலையேற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

News September 26, 2025

கேரள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த துல்கர் சல்மான்

image

சொகுசு கார் பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் <<17803612>>துல்கர் சல்மான்<<>> கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். முறையான ஆவணங்களை அளித்து கார் வாங்கியதாகவும், ஆவணங்களை கொடுத்து விளக்கம் தந்தும் அதிகாரிகள் கார்களை பறிமுதல் செய்ததாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பூடானில் இருந்து சட்டவிரோதமாக சொகுசு கார்களை இறக்குமதி செய்ததாக சமீபத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

error: Content is protected !!