News April 26, 2024
சொம்பைக் காட்டி மோடியை விமர்சித்த ராகுல்

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுக் காலிச் சொம்பைப் பிரதமர் கொடுத்துள்ளதாக ராகுல் விமர்சித்துள்ளார். பாஜகவை, பாரதிய ஜனதா கட்சி என்பதற்குப் பதில் மோடியின் பாரதிய சொம்பு கட்சி என்று அழைக்கலாம் என்று அவர் விமர்சித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா வந்த மோடிக்கு எதிராக காலி சொம்பைக் காட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தற்போது ராகுலும் சொம்பைக் கையில் எடுத்துள்ளார்.
Similar News
News January 24, 2026
எந்த blood group-க்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு அதிகம்

மருத்துவ ஆய்வின் அடிப்படையில்: *AB ரத்த குரூப் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம், நினைவாற்றல் பாதிப்பும் வரலாம் *A, B குரூப்பினருக்கு டைப்-2 நீரிழிவு வாய்ப்பு அதிகம். *A-க்கு மன அழுத்தம், வயிறு புற்றுநோய் வாய்ப்பு அதிகம். *A, AB, B-க்கு இதய நோய், கணைய புற்றுநோய் வாய்ப்பு அதிகம். *O- மற்ற நீண்ட ஆயுளுக்கு வாய்ப்பு. மற்ற குரூப்களுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு நோய் தாக்க வாய்ப்பு குறைவு.
News January 24, 2026
நீட் தேர்வு வேண்டாம்… PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை கைவிட வேண்டும் என PM மோடிக்கு CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை TN அரசு எதிர்த்து வரும் நிலையில், BPT, BOT படிப்புகளுக்கும் நீட் கட்டாயமக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார். இது ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்கு செலவழிக்க கட்டாயப்படுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
பண மழை கொட்டும் 3 ராசிகள்

கேது பகவான் நாளை(ஜன.25) பூரம் நட்சத்திரத்தின் 2-வது பாதத்தில் இருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்புள்ளது. *கன்னி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். நிதி நிலைமை மேம்படும். *தனுசு: சேமிப்பு உயரக் கூடும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.


