News December 31, 2024
பவுன்சர் போல நடந்துகொண்ட ராகுல்: BJP எம்பி

ராகுல் காந்தி, ஒரு லீடர் போல் அல்லாமல் பவுன்சர் போல நடந்துகொண்டதாக, BJP எம்பி பிரதாப் சந்திர சாரங்கி குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 19ஆம் தேதி பார்லிமென்ட் நுழைவு வாயிலில் ராகுல் தள்ளிவிட்டதாகக் கூறி தலையில் காயங்களுடன் சிகிச்சை பெற்ற அவர், அம்பேத்கரை அவமதித்த INCயை கண்டித்து அமைதியான முறையில் BJP எம்பிக்கள் நடத்திய போராட்டத்தை, ராகுலுடன் கூட்டமாக வந்தவர்கள் சீர்குலைத்ததாகவும் சாடியுள்ளார்.
Similar News
News November 9, 2025
நவம்பர் 9: வரலாற்றில் இன்று

*1896-நாதசுவரக் கலைஞர் பி.எஸ்.வீருசாமி பிள்ளை பிறந்தநாள். *1959-வீணைக் கலைஞர் ஈ.காயத்ரி பிறந்தநாள். *1965-நடிகர் வேணு அரவிந்த் பிறந்தநாள். *1988-தேங்காய் சீனிவாசன் மறைந்த நாள். *1998-பி.எஸ்.வீரப்பா மறைந்த நாள். *2006-எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்த நாள். *2024-நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த நாள்.
News November 9, 2025
பூதத்தின் பிடியில் தமிழ் சினிமா: கஸ்தூரி

தமிழ் திரையுலகம் ஒரு பூதத்தின் பிடியில் இருப்பதாக கஸ்தூரி விமர்சித்துள்ளார். பாஜக மாநில கலை & கலாசார பொதுக்குழுவில் பேசிய அவர், தமிழ் திரையுலகம் ஒரு சாராரிடம் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். அது மொத்த ஊரிடம் இருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி நன்றாக பரிணமிக்கும் என்றும், திரைத்துறையை விடுவிப்பதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் கஸ்தூரி பேசியுள்ளார்.
News November 9, 2025
திமுகவினர் ஒப்பாரி வைக்கின்றனர்: RB உதயகுமார்

திமுகவை எதிர்ப்பில் அதிமுக ஒருபோதும் பின்வாங்கியதில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திமுகவில் தற்போது அமைச்சராக இருக்கும் பலர் EX-அதிமுகவினர் என்றும், KKSSR, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி என திமுகவுக்கு சென்றவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதாகவும் அவர் பேசியுள்ளார். இதனால், ஏற்கெனவே திமுகவில் இருப்பவர்கள், தங்களுக்கு பதவி கிடைப்பதில்லை என ஒப்பாரி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


