News October 4, 2025
ராமனாக ராகுல்; ராவணனாக மோடி: PHOTO

தசரா பண்டிகையையொட்டி உ.பி., காங்., ஆபீஸ் வாசலில் வரையப்பட்டிருந்த ஓவியம் சர்ச்சையாகியுள்ளது. அதில், ராமனாக ராகுல் காந்தியும், ராவணனாக மோடியும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ராவணனின் 10 தலைகளும் ஊழல், ED, ECI, CBI, Bihar SIR என சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சாமானிய மக்களின் பிரச்னைகளை ராகுல் தீர்த்துவைப்பார் என்ற நோக்கிலேயே இதனை வரைந்த காங்., நிர்வாகி ஆர்யன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 4, 2025
அக்டோபர் 4: வரலாற்றில் இன்று

*உலக விலங்கு தினம்.
*உலக விண்வெளி வாரம் (அக்.4 – 10) தொடங்கியது.
*1824 – மெக்ஸிகோ குடியரசு நாடானது.
*1830 – ‘பெல்ஜியம்’ நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடாகியது.
*1884 – சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்.
*1904 – திருப்பூர் குமரன் பிறந்தநாள்.
News October 4, 2025
3-வது டைவர்ஸ் கேட்கிறாரா சானியா மிர்சா Ex கணவர்?

சானியா மிர்சாவின் முன்னாள் கணவரான ஷோயாப் மாலிக், தனது 3-வது மனைவியான சனா ஜாவத்தை விவாகரத்து செய்யவுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் ஷோயாப், சனா இருவரும் தள்ளி தள்ளி அமர்ந்துள்ளனர். இதனால் விரைவில் விவாகரத்து நடைபெறுமோ என நெட்டிசன்கள் கேட்கின்றனர். சானியாவுக்கு முன்பாகவே, ஆயிஷா சித்திக் என்பவரை மணந்து 8 ஆண்டு திருமண வாழ்க்கை நடத்தியிருந்தார் ஷோயாப்.
News October 4, 2025
விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை: துரைமுருகன்

விஜய்க்கு அரசியலில் போதுமான பக்குவம் இல்லை என்ற துரைமுருகன், அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் கூட திமுக அஞ்சியதில்லை, இனி அஞ்சப் போவதுமில்லை என்றார். எப்படிப்பட்ட சூழலிலும் மக்களுக்கான திமுகவின் சேவையை தொடர்ந்து கொண்டு இருப்போம் என்றும் கூறினார்.