News April 26, 2025
ராகு – கேது பெயர்ச்சி நிறைவு

வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி இன்று மாலை 4.28 மணிக்கு ராகு – கேது பெயர்ச்சி நடைபெற்றது. 18 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெயரும் ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்திருப்பதாக திருநாகேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல, கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Similar News
News November 26, 2025
பெரம்பலூர்: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி

சேலத்தை சேர்ந்தவர் கருப்பையா சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். இவரும், இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த காளிமுத்துவும் சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார், கருப்பையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News November 26, 2025
திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.