News October 14, 2024
ராகு-கேது தோஷம் போக்கும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்

1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலம் தூத்துக்குடி கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில். தேவர்களுக்குப் பரப்பிரம்மத்தை ஈசன் உபதேசித்ததாகக் கூறப்படும் இத்தலத்திற்கு உக்கிர பாண்டியர் கற்றளி கோயில் எழுப்பித்ததாக வரலாறு கூறுகிறது. இத்தலத்திற்கு ஜென்ம நட்சத்திர நாளில் வந்து ஞானாம்பிகை சமேத ஹஸ்தீஸ்வரருக்கு 11 வகை அபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றி வணங்கினால் ராகு – கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News August 13, 2025
கவர்ச்சி கேரக்டர்களுக்கே அழைக்கிறார்கள்: பூஜா

இந்தி சினிமாவில் தன்னை கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைப்பதாக நடிகை பூஜா ஹெக்டே வேதனை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தான் நடித்த படங்களை அவர்கள் பார்க்கவில்லை என தான் நினைப்பதாகவும் கூறினார். ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரமாக தன்னை மாற்றிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்க்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
News August 13, 2025
சின்னசாமி மைதானத்துக்கு தொடரும் சோதனைகள்

செப்.30-ம் தேதி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் துவங்குகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இத்தொடரின் போட்டிகளை திருவனந்தபுரத்திற்கு மாற்ற BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறை அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கம் தவறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News August 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 13 – ஆடி 28 ▶ கிழமை: புதன் ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.