News April 25, 2025
காப்புரிமை மீறல்.. ₹2 கோடி செலுத்த ரஹ்மானுக்கு உத்தரவு

பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற ‘வீரா ராஜா வீரா’ பாடல் ‘சிவ ஸ்துதி’ என்கிற பாடலை காப்பி அடித்து இசையமைக்கப்பட்டதாக கூறி ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின் போது ‘வீரா ராஜா வீரா’ பாடல் தனது அசல் படைப்பு என ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் வழக்கில் முகாந்திரம் உள்ளதால் ₹2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 28, 2025
மகளிர் உரிமை: ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் விடுபட்டோருக்கும் விரைவில் இந்தத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்து வந்தது. அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய CM ஸ்டாலின், ஜூனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார். இந்நிலையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஜூன் 4-இல் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
News April 28, 2025
பஹல்காம் தாக்குதல் செய்தி.. சர்ச்சையில் சிக்கிய பிபிசி

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிபிசி வெளியிட்ட செய்திகள் சர்ச்சையானது. “காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியர்களுக்கான விசாக்களை PAK நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இது இந்தியா மீது தவறு என்பது போல் உள்ளதாக பலர் விமர்சித்தனர். இதேபோல் தீவிரவாதிகள் என்பதற்கு பதில் போராளிகள் என்று குறிப்பிட்டதை கண்டித்தும் மத்திய அரசு பிபிசி-க்கு கடிதம் எழுதியுள்ளது.
News April 28, 2025
சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி.. மீண்டும் விளக்கம்

காஷ்மீர் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த போது விஜய் ஆண்டனி தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையானது. அதில் பாக். மக்கள் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதனை தெளிவுபடுத்தும் விதத்தில் அவர் மீண்டும் X-ல் பதிவிட்டுள்ளார். அதில் பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே என்று குறிப்பிட்டுள்ளார்.