News October 27, 2025
ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ரஹானே

ரஞ்சி டிராபியில் இன்று ரஹானே 159 ரன்களை விளாசினார். இதையடுத்து அவர் பேசும்போது, தன்னை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆஸி.,க்கு எதிரான BGT தொடரின் போது அணிக்கு நான் தேவைப்பட்டேன். ஆனால், BCCI தன்னிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. வயது என்பது வெறும் எண் தான் என்பதை ரோஹித்தும், கோலியும் நிரூபித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
எவ்வளவு கலோரிக்கு எவ்வளவு நிமிடம் நடக்க வேண்டும்?

நடைபயிற்சி செய்வதால், உடலில் நிமிடத்திற்கு சராசரியாக 3-4 கலோரி எரிகிறது. 1 மணி நேரம் நடந்தால், சராசரியாக 234 – 250 கலோரிகளை எரிக்கலாம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளன, அதற்கு எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News October 27, 2025
யுவராஜ் சிங்கின் அமைதியான பிளேயிங் 11 இவர்கள் தான்!

சமீபத்திய நேர்காணலில், யுவராஜ் சிங்கிடம் ‘அமைதியான பிளேயிங் 11’-ஐ தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு தவறாக பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதாவது, ஆக்ரோஷமான பிளேயிங் 11. இதற்கு யுவராஜ் சிங் கூறிய அணியில் கம்பீர், ரிக்கி பாண்டிங், கோலி, ஏ பி டிவில்லியர்ஸ், பிளிண்டாப், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், சிராஜ், சோயப் அக்தர் ஆகியோருடன் தன்னையும் இணைத்துக்கொண்டார்.
News October 27, 2025
இந்தியா – சீனா நேரடி விமான சேவை துவங்கியது

கொரோனா தொற்றின்போது இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நேரடி விமான சேவை துவங்கியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு 175 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. நவ.10-ல் டெல்லியில் இருந்தும் சீனாவுக்கு நேரடி விமான சேவை துவங்கவுள்ளது. இது இரு நாடுகளிடையே வர்த்தகம், சுற்றுலா உள்பட இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்தும்.


