News October 2, 2025
ரகுராம் ராஜன் தந்தை மறைவு: CM ஸ்டாலின் இரங்கல்

RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் தந்தை <<17887963>>ராகவாச்சாரி கோவிந்தராஜன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு வேதனை அளிப்பதாகவும், ரகுராம் ராஜனை தொடர்பு கொண்டு அவருக்கு இரங்கலை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், RAW அமைப்பில் அவரது பணி நன்றியுடன் நினைவுகூரப்படும் என ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 2, 2025
ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு புது ஆயுதம் தரும் அமெரிக்கா

ரஷ்யாவை பணிய வைக்க முடியாத விரக்தியில், டிரம்ப் புது வியூகத்தை கையிலெடுக்கிறார். 2,500 கிமீ தொலைவு சென்று தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவற்றை கொண்டு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை உக்ரைனால் தாக்க முடியும். அமெரிக்கா அப்படி முடிவுசெய்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
News October 2, 2025
நவம்பர் மாதம் எந்த ஊருக்கு போகலாம்?

நவம்பர் மாதம் தென்னிந்திய மலைநகரங்களுக்கு செல்ல சிறந்த காலமாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கனமழை காலம் முடிந்து, மலைப்பகுதிகள் பசுமையாய் மாறியிருக்கும். மிதமான குளிர்ச்சி இருக்கும். டிசம்பர் விடுமுறை கூட்டம் வருவதற்கு முன், கூட்டம் குறைவாக இருக்கும். நவம்பர் மாதம் செல்ல வேண்டிய மலை நகரங்களின் போட்டோஸ் மேலே கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. நீங்க எங்க போறீங்க? சொல்லுங்க.
News October 2, 2025
தலைமுடி கொட்டுதா? இத நோட் பண்ணுங்க

பெண்களே, தூங்கும் போது Loose Hair-ல் தூங்கணுமா அல்லது பின்னல் போடணுமா என சந்தேகமா இருக்கா? தூங்கும்போது தலைமுடியை விரித்துப்போட்டு தூங்குவதால் முடி உதிர்வு ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே லூசான பின்னல் அணிந்து தூங்குவது சிறந்தது. அதோடு, உங்கள் தலையணைக்கு பருத்திக்கு பதிலாக சில்க் துணியை உறையாய் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் முடியை மிருதுவாக்கும் என்கின்றனர். SHARE.