News May 12, 2024
இந்திய கிரிக்கெட் அணியில் இனவெறி?

இந்திய அணியில் இனவெறி நிலவியதாக முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த அவர், 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பைகளை கைப்பற்றிய இந்திய அணியில் விளையாடியிருந்தார். இந்நிலையில் அவர், கிரிக்கெட் அணியில் தாம் விளையாடிய காலம் முதல், தென்னிந்திய மக்களுக்கு எதிரான மனநிலையை கண்டதாகவும், “மதராசி” என்று தாம் அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News February 11, 2026
ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்

மாசி மாத பூஜைகளை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (பிப்ரவரி 12) திறக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் 17-ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் காலையில் நெய்யபிஷேகமும், இரவில் படி பூஜைகளும் நடைபெறவுள்ளன. ஐயப்ப பக்தர்கள் பெரும் திரளாக வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
News February 11, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு!

தங்கம் விலை இன்று(பிப்.11) சற்று உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹14,600-க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹1,16,800-க்கும் விற்பனையாகிறது. <<19106485>>சர்வதேச சந்தையில்<<>> நிலவும் மந்த நிலை காரணமாக <<19098346>>நேற்று சவரனுக்கு ₹560<<>> குறைந்திருந்த தங்கம், இன்று சற்று உயர்ந்துள்ளது.
News February 11, 2026
திமுகவை கூட்டணி கட்சிகளே தோற்கடிக்கும்: அன்புமணி

பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு காரணமான திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் அன்புமணி பேசியுள்ளார். 5 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த ஸ்டாலின், 45 நாள்களில் 26 புதிய ஏமாற்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக சாடினார். மேலும், திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளே ஸ்டாலினை தோற்கடிக்கும் சூழல்தான் தற்போது உள்ளதாக தெரிவித்தார். இது பற்றி உங்கள் கருத்து?


