News March 17, 2025
காயங்களை நாய் நக்கினாலும் ரேபிஸ் தடுப்பூசி அவசியம்

மனிதர்களின் காயங்களை நாய் நக்கினாலும் ஏஆர்வி ரேபிஸ் தடுப்பூசி போட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாய் கடித்து தடுப்பூசி போடாத நபர், ராணிப்பேட்டையில் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில், காயங்களில் நாய் நக்கினாலும், நாயின் உமிழ்நீர் மனிதர்கள் மீது பட்டாலும் விஷம்தான். இதற்கும் ஏஆர்வி தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News September 23, 2025
கல்வி நிதி: மத்திய அரசுக்கு அன்பில் மகேஸ் வேண்டுகோள்

மாணவர்கள் நலன் சார்ந்த கல்வி நிதியில் அரசியல் செய்யாதீர்கள் என மத்திய அரசை அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கல்வி நிதியை தராமல் மத்திய அரசு முரண்டு பிடிப்பதாக அவர் சாடியுள்ளார். இந்தி, சமஸ்கிருதத்தை தமிழக அரசு ஏற்காது என குறிப்பிட்ட அவர், மத்திய பாஜக அரசு வலுக்கட்டாயமாக மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 23, 2025
இது தெரியாமத்தான் இவ்வளவு நாளா இருந்துட்டேன்

திருமண வயது வந்தும், காதல் செய்ய தெரியாதவர்களே.. கொஞ்சம் இந்த கதையை கேளுங்க. மேட்ரிமோனி ஆப்பில் பேசத் தொடங்கிய 15 நிமிடங்களில் ‘இந்த மாசத்துலயே கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்று ஒரு பெண் ஷாக் கொடுத்ததாக இளைஞர் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ‘அந்த சூட்சமத்தை எங்களுக்கும் சொல்லித் தாங்க’ என்றும், ‘15 நிமிஷத்துல அப்டி என்ன பேசிருப்பாங்க’ எனவும் கேட்டு வருகின்றனர்.