News February 25, 2025
ஜீவாவுக்கு ராஷி கன்னா செய்த சத்தியம்

பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ராஷி கன்னா பிராமிஸ் செய்துள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த ‘அகத்தியா’ பட புரொமோஷன் விழாவில் பேசிய அவர், இருவரும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸை பார்த்து பிரமிப்படைந்ததாகவும், இப்படத்திற்காக இயக்குநர் பா.விஜய் அதிகமாக மெனக்கெட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 25, 2025
அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக? டி.ஜெ. பதில்

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சி பாெதுச் செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இருமொழி கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், அச்சம் காரணமாகவே அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக அரசு கூட்டியுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார். திமுகவுக்கும், பாஜகவுக்கும் ரகசிய புரிதல் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News February 25, 2025
‘விடாமுயற்சி’ வசூலை முந்தும் ‘டிராகன்’?

அமெரிக்காவில் ‘விடாமுயற்சி’ படத்தின் வசூலை ‘டிராகன்’ முந்த வாய்ப்புள்ளது. ‘விடாமுயற்சி’ படம் முதல் வார இறுதியில் $8 லட்சம் (₹6.95 கோடி) வசூலித்தது. ஆனால், ‘டிராகன்’ படம் வெளியான 3 நாள்களில் $6.50 லட்சம் (₹5.64 கோடி) வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருப்பதால், 1 மில்லியன் டாலர் வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 25, 2025
BREAKING: 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

பல்வேறு மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் (பிப்.27) தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், பிப்.28இல் சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். 1ம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என IMD குறிப்பிட்டுள்ளது.