News August 6, 2025
‘ராஞ்சனா’ ரி-ரிலீஸ்.. தனுஷ் வழக்கு

‘ராஞ்சனா’ படத்தின் கிளைமாக்ஸை AI வைத்து மாற்றி ரி-ரிலீஸ் செய்ததை எதிர்த்து தனுஷுடன் சேர்ந்து வழக்கு தொடர உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தெரிவித்துள்ளார். 2013-ல் வெளியான இப்படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால், அவர் உயிருடன் இருந்து மகிழ்ச்சியாக படம் முடிவது போல் தற்போது எடிட் செய்யப்பட்டுள்ளது. இது வலியை தருவதாக இருவரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
Similar News
News March 3, 2026
விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. உருக்கமான PHOTO

நடிகை தேவிப் பிரியா <<19278785>>கார் விபத்தில்<<>> சிக்கியதில் அவருடைய டிரைவர் முத்து உயிரிழந்தார். 15 ஆண்டுகளாக தன்னை கவனித்து வந்த முத்துவின் இழப்பை தாங்க முடியவில்லை என அவர் கண்ணீர்மல்க தெரிவித்திருந்தார். இந்நிலையில், முத்துவின் படத்தை SM-ல் பதிவிட்ட அவர், ‘அன்புத் தம்பி நொடிப் பொழுதில் உயிர்பிரிந்தாய்; இனி ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகம்தான்’ என குறிப்பிட்டுள்ளார். மேலே ஸ்வைப் செய்து போட்டோவை பாருங்க.
News March 3, 2026
திமுகவா.. அதிமுகவா? கிருஷ்ணசாமி ஆலோசனை

2026 தேர்தல் தொடர்பாக மார்ச் 5-ம் தேதியன்று புதிய தமிழகம் கட்சி ஆலோசனை நடத்தவுள்ளது. 10+1 சீட்களை அதிமுக கூட்டணியில் கேட்டுள்ளதால் இழுபறி நீடிக்கிறதாம். அதேநேரம், திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 + 1 என திமுக ஆஃபர் அளிப்பதாகவும், இதுகுறித்தே மார்ச் 5-ல் ஆலோசனை நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் கருத்து என்ன?
News March 3, 2026
வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

சம்மர் சீசனில், வாட்டி வதைக்கும் வியர்க்குருவை சமாளிக்க பலரும் வியர்க்குரு பவுடர்களை பயன்படுத்துகின்றனர். அந்த பவுடர்களில் menthol, camphor, zinc oxide போன்றவை இருக்க வேண்டும். இவற்றால், வியர்வை கொஞ்சம் உறிஞ்சப்படும். ஆனால், இந்த பவுடர் நிரந்தர நிவாரணம் அளிக்காது. ஆனால், இந்த பவுடரை அதிகமாக பயன்படுத்தினால், வியர்வை நாளங்களை அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.


