News March 2, 2025

அதிமுகவில் இருந்து ஆர்.மோகன் நீக்கம்: இபிஎஸ்

image

அதிமுகவிலிருந்து ஆர்.மோகனை நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார். வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பொறுப்பு வகித்த மோகன் அண்மையில் ஓபிஎஸ் அணியில் சேர்ந்த நிலையில், இந்த நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோகனுடன், அதிமுகவினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் இபிஎஸ் ஆணையிட்டுள்ளார். அதிமுக மீண்டும் ஒன்றிணைவது குறித்து பலரும் பேசி வரும் நிலையில், இந்த நீக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 16, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது HAPPY NEWS

image

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க உள்ளதாம். நாளை மறு ஆய்வு நடைபெறாவிட்டால் மார்ச் 19-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக்குழு பார்ப்பதாக இருந்த நிலையில், குழுவில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜன நாயகன் படம், சென்சார் பிரச்னையால் தற்போதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.

News March 16, 2026

ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

image

USA – ஈரான் போரின் எதிரொலியால், கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், நிப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 23,408 புள்ளிகளிலும் வர்த்தகமாயின. பெரும்பாலான வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

News March 16, 2026

பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

image

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். மார்ச் 19 (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து விடுமுறையாகும். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!

error: Content is protected !!