News January 10, 2025
Fire Mode-ல் இபிஎஸ் கேட்ட கேள்விகள்

திமுக கூறிய வாக்குறுதிகளில் 10-15% மட்டுமே நிறைவேற்றி உள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பெட்ரோலுக்கு ₹5, டீசலுக்கு ₹3 ஏன் குறைக்கவில்லை? சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ₹100 மானியம் கொடுப்பதாக கூறியது என்னாச்சு? என அடுத்தடுத்து அவர் கேள்விகள் எழுப்பினார். சட்டப்பேரவையை 100 நாள்கள் நடத்துவதாக கூறினீர்கள், ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அப்படித்தான் நடக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News December 14, 2025
விஜய் மீது பாய்ந்த அமைச்சர் TRB ராஜா

நாங்கள் வளர்ச்சியை முன்வைக்கிறோம், அவர் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறார் என விஜய்க்கு அமைச்சர் TRB ராஜா பதிலடி கொடுத்துள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர், மத்திய அரசின் ஒத்துழைப்பின்றி TN-ல் 16% பொருளாதார வளர்ச்சியை நிரூபித்துக்காட்டியுள்ளதாக கூறினார். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக அரசு, CM ஸ்டாலின் செயல்பாடுகளை விஜய் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்

2026 தேர்தலையொட்டி, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக, அதிமுக, தேமுதிக, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி சுமார் 500-க்கும் மேற்பட்டோர், நாகை மாவட்ட செயலாளர் மா.சுகுமாறன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் விரைவில் விஜய்யை நேரில் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
News December 14, 2025
சளியை கரைக்கும் சிம்பிள் கஷாயம்

சளி வாட்டும்போது அதில் இருந்து வெளியேற, மாத்திரைகளை தேடிச் செல்வதே பலரின் வழக்கம். ஆனால் சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3, மிளகு -3, சுக்குப் பொடி – கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – 2 சிட்டிகை, பிளாக் சால்ட் – 2 சிட்டிகை, நா.சர்க்கரை – 1 ஸ்பூன் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடுங்கள். அதை 1 டம்ளராக சுண்ட வைத்தால் கஷாயம் ரெடி.


