News May 6, 2024
EX அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் விசாரணை

நெல்லை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் விசாரணை நடந்து வருகிறது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இறப்புக்கு முன் அவர் எழுதிய 2 மரண வாக்குமூலம் கடிதத்தில், கட்சி நிர்வாகிகள் பலரது பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 24, 2026
விஜய்யை பார்க்க சென்ற இளைஞர் பலி

தஞ்சையில் விஜய் சென்ற காரை வேகமாக பின்தொடர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஹாஸ்பிடலில் கடந்த 3 வாரமாக தீவிர சிகிச்சையில் இருந்த அவர், இன்று பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷின் இழப்பை தாங்க முடியாமல் அவரது தந்தை அழுத காட்சி, நம் நெஞ்சை உலுக்குகிறது. இவரது குடும்பத்திற்கு தவெக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 24, 2026
‘துரந்தர் 2’ வேற லெவல்: ரஜினி

‘துரந்தர் 2’ படத்தை ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தனது X பதிவில் அவர் ரன்வீர் சிங், இயக்குநர் ஆதித்ய தார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். 4 நாள்களில் அப்படம் ₹700+ வசூலித்திருக்கும் நிலையில், ஆதித்ய தாரை வசூல் மன்னன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்க ‘துரந்தர் 2’ பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?
News March 24, 2026
ராசி பலன்கள் (24.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


