News March 18, 2024
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள தேர்தல் பத்திரங்கள்

தேர்தல் பத்திரங்கள் குறித்த மனுவை தாக்கல் செய்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால், பத்திர விவரங்கள் தவறாக உள்ளதாக மற்றொரு சந்தேகத்தை தெரிவித்துள்ளார். ஏப்ரல்-2018 இல் தலா ரூ.1000 வீதம் 2 தேர்தல் பத்திரங்களை வாங்கினேன். ஆனால், எஸ்பிஐ வெளியிட்ட பட்டியலில் 20 அக்டோபர் 2020இல் வாங்கப்பட்டதாகக் காட்டுகிறது. இது தவறா? அல்லது என் பெயரில் வேறு எவரேனும் வாங்கியுள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News September 9, 2025
அடுத்த 2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகள்?

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், அவர்களின் பதவி உயர்வுக்கும் TET தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டமிடலில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருகிறதாம். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் 6 தகுதி தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
Tech: லேப்டாப் அதிகம் Hang ஆகுதா? இத பண்ணுங்க போதும்!

உங்கள் Laptop அதிகம் Hang ஆகிறதா? இதற்கு, இந்த சிறு சிறு விஷயங்கள் கூட காரணமாக இருக்கலாம். செக் பண்ணுங்க. ➤Laptop-கள் சீராக இயங்க, சாஃப்ட்வேரை அப்டேட்டில் வைத்திருக்கவேண்டும் ➤அதிக நேரம் சார்ஜில் போட்டுவைக்கக்கூடாது ➤keyboard-ஐ க்ளீன் செய்வது அவசியம் ➤தேவையில்லாத செயலிகளை பதிவிறக்க வேண்டாம் ➤தேவையில்லாத போட்டோ, வீடியோக்களை டெலீட் செய்து, Storage-ஐ Clear செய்யுங்க. SHARE.
News September 9, 2025
VP Election: அடுத்தடுத்து புறக்கணிக்கும் கட்சிகள்

15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தேர்தலை புறக்கணிப்பதாக பஞ்சாபின் ஷிரோமனி அகாலி தள் கட்சி அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு ஒரேயொரு MP உள்ளார். அதேபோல், சுயேட்சை MP-க்களான சரப்ஜீத் சிங் கல்சா, அம்ரித்பால் சிங் ஆகியோரும் புறக்கணித்துள்ளனர். ஏற்கெனவே BRS, பிஜு ஜனதா தள் ஆகிய கட்சிகளும் தேர்தலை புறக்கணித்துள்ளன.