News August 2, 2024
மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கேள்வி

எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் நட்டா அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றி எந்த விவரமும் இல்லையென எம்.பி சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?
என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 2, 2025
FLASH: கேன் வில்லியம்சன் T20 போட்டிகளில் இருந்து ஓய்வு!

நியூசி., அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். 2011-ல் T20-ல் அறிமுகமான அவர், 93 போட்டிகளில் விளையாடி 33 சராசரியுடன் 2,575 ரன்களை குவித்துள்ளார். அதில் 18 அரை சதங்களும் அடங்கும். நியூசி., கேப்டனாக 75 போட்டிகளில் செயல்பட்டார். இவரது கேப்டன்சியில் 3 முறை நியூசி., T20 WC-யில் பங்கேற்றது. IPL-ல் SRH, GT அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
News November 2, 2025
‘SIR’ விவகாரத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழ்நாட்டில் ‘SIR’ வரும் 4-ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்க அதிமுக, தவெக உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SIR-ஐ அவசரமாக செய்யக் கூடாது. நடைமுறை சிக்கல்களை சரி செய்ய வேண்டும். SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித் திட்டமா என பல கோணங்களில் ஆலோசிக்கப்படுகிறது.
News November 2, 2025
தங்கம், வெள்ளி விலை மேலும் குறைகிறது

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான அடிப்படை விலையை மத்திய அரசு மாற்றியமைத்திருக்கிறது. இதன்படி, 10 கிராம் தங்கத்துக்கு 45 டாலர்கள், 1 கிலோ வெள்ளிக்கு 107 டாலர்கள் வரையிலும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த குறைப்பின் வாயிலாக தங்கம், வெள்ளி இறக்குமதியாளர்களுக்கு வரிச்சுமை ஓரளவுக்கு குறையும். அதன் எதிரொலியாக உள்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


